முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோதிடம் பலிக்கும்: 2026-ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும்: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

சேலம்,  நான் ஜோதிடர் ஆகிவிட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஜோதிடம் பலிக்கும். 2026-ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். 

சேலம் சித்தூரில் நடந்த அ.தி.மு.க., நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி, எங்கள் கூட்டணியில் பிளவு என்பதே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தான் சொல்லிக் கொள்கிறார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்கள், தி.மு.க., அரசின் ஆட்சியை விமர்சிக்கிறார்கள். 41 மாத தி.மு.க., ஆட்சியை விமர்சிக்காத கூட்டணி கட்சிகள், தற்போது விமர்சிக்கிறார்கள் என்றால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தானே அர்த்தம். 

அடிப்படை கட்டமைப்பு உள்ள கட்சி அ.தி.மு.க., தான். இளைஞர்களை கட்சியின் அதிகம் சேர்க்க நிர்வாகிகள் முயற்சிக்க வேண்டும்.  2021 சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட லோக்சபா தேர்தலில் சற்று குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளோம். 2021-ல் பெற்ற வாக்குகளை 2026 சட்டசபை தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற அனைவரும் உழைக்க வேண்டும். லோக் சபா தேர்தலோடு, சட்டசபை தேர்தலை ஒப்பிடும் போது, தி.மு.க., கூட்டணி நம்மை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.

41 மாத தி.மு.க., ஆட்சியில் ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. நான் ஜோதிடர் ஆகிவிட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலின் அவர்களே ஜோதிடம் பலிக்கும். 2026-ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும். தி.மு.க., என்றால் குடும்பம், குடும்பம் என்றால் தி.மு.க.,தான். அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. உதயநிதி, கனிமொழி, சபரீசன், ஸ்டாலினின் மனைவி ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் தான் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும்.  வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 சட்டசபை தேர்தல் இருக்கும்.  எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து