முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தல்: வரிசையில் நின்று முன்கூட்டியே வாக்களித்தார் ஜோ பைடன்

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      உலகம்
Joe-Biden 2024-10-29

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க  அதிபர் தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  டெலாவேர் மாநிலத்தில் அவரது வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வாக்களிப்பு மையத்தில்  நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும்  5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் (59) களமிறங்கி உள்ளார். 

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இருவரும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது உடல்நலம் மற்றும் கட்சியினரின் விருப்பம் காரணமாக, மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியில்லை என்று கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். 

அவருக்குப் பதிலாக ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், அதிபர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அமெரிக்க குடிமக்கள், அதிகாரிகள் பலர் முன்கூட்டியே வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 

அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் தனது வாக்கை முன்கூட்டியே பதிவு செய்தார். டெலாவேர் மாநிலத்தில் அவரது வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வாக்களிப்பு மையத்தில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். 

வாக்காளர்கள் தெருவில் வரிசையாக நின்று கொண்டிருந்த போது, பைடன் அவர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்றார். வரிசையில் காத்திருந்த போது வாக்காளர்களுடன் உரையாடினார், மேலும் ஒரு வயதான பெண்ணை சக்கர நாற்காலியில் அவருக்கு முன்னால் வாக்களிக்க உதவினார். சுமார் 40 நிமிடம் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து