முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      உலகம்
Jelensky 2024 08 19

Source: provided

கீவ் : பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும் என  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, கடந்த  2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாடு மீது போர் தொடுத்தது. இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் தற்போதும் இருநாடுகளுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்தபாடில்லை.  

ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த யுகம் போருக்கானது இல்லை எனவும் எந்த ஒரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் எனவும் இந்திய பிரதமர் மோடி கூறிவருகிறார். 

இந்த நிலையில்  பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும் என  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில், 

உலகின் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என பல்வேறு சிறப்புகளை இந்தியா பெற்றிருக்கிறது. சர்வதேச அரசியலில் அந்த நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்குகிறார். உக்ரைன் போரை நிறுத்த அவரால் உதவ முடியும். இது தொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து