முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக பாகிஸ்தானின் லாகூர்

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      உலகம்
Pak 2024-10-30

Source: provided

லாகூர் : உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் என்ற மோசமான நிலையை பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரம் எட்டியுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய நகரம் லாகூர். இங்கு சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகம். இங்கு காற்றுக் தரக் குறியீடு 708 என்ற மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.  உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள வருடாந்திர பாதுகாப்பு எல்லை அளவை விட 86 மடங்கு அதிக காற்று மாசுபாட்டால் லாகூர் நகரம் சிக்கி தவித்து வருகிறது. 

இதனால் இந்நகரில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். பயிர் கழிவுகள் எரிப்பாலும், 45 லட்சம் மோட்டார் சைக்கிள்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள், புகை வெளியேற்ற கட்டுப்பாடின்றி செயல்படும் தொழிற்சாலைகளாலும், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மோசமான காற்றின் விளைவுகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க, பஞ்சாப் மாநில மூத்த அமைச்சர் மரியம் ஒளரங்கசீப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருமல், வைரஸ் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் உள்ளிட்ட சுவாச பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாஸ்க் மற்றும் கண்ணாடி அணிய வேண்டும் என சுகாதாரத்துறையும் எச்சரிக்கை செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து