முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா: பசும்பொன் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மாலையணிவித்து மரியாதை

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      தமிழகம்
CM-2 2024-10-30

Source: provided

கமுதி : முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை  மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நேற்று நடந்தது.  இதில் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர் அவர் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில்  தங்கினார். இதையடுத்து நேற்று காலை 7 மணி அளவில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மருது சகோதரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்ற முதல்வர்  மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவில் அரசின் சார்பில் கலந்து கொண்டு அவரது நினைவாலயத்தில் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

அதனை தொடர்ந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு,பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ராஜ கண்ணப்பன், டி.ஆர்.பி.ராஜா, மகேஷ் அன்பில் பொய்யாமொழி, கீதா ஜீவன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பசும்பொன்னில் முதல்வரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து