முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் 2025 சீசன்: தக்கவைத்த வீரர்களை அறிவித்தது ஐதராபாத்

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      விளையாட்டு
Hyderabad 2024-05-25

Source: provided

மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனை முன்னிட்டு தக்கவைத்த வீரர்களை அறிவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவித்துள்ளது.

10 அணிகள்...

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் நாளை கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.6 கோடிக்கு... 

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், கிளாசன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி என 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது. 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது. அதில் கிளாசென் ரூ.23 கோடி, பாட் கம்மின்ஸ் 18 கோடி, அபிஷேக் சர்மா ரூ.14 கோடி, டிராவிஸ் ஹெட் ரூ. 14 கோடி, நிதிஷ் ரெட்டி ரூ. 6 கோடிக்கு தக்கவைத்துள்ளது. இருப்பினும், ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி வசம் ரூ.45 கோடி ரூபாய் மட்டுமே இருக்கும். வெறும் 45 கோடியில் 18-20 வீரர்களை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து