முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் மாநாடு: வரும் 2-ம் தேதி சபாநாயகர் அப்பாவு ஆஸ்திரேலியா பயணம்

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      தமிழகம்
Appavu 2023-09-12

Source: provided

சென்னை : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறும் காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு வரும் 2-ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரத்தில் வரும் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 67-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்கிறார். 

இதற்காக அவர் வரும் 2-ம் தேதி (சனிக்கிழமை) அன்று இரவு 11.25 மணிக்கு விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்று அங்கிருந்து மலேசியா நாட்டிற்குச் சென்று, அங்கிருந்து சிட்னி நகரை 5-ம்  தேதி சென்றடைகின்றனர். 

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அவர் நியூசிலாந்து நாட்டிற்குச் சென்று விட்டு வரும் 17-ம்  தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை திரும்புகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து