முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என நேற்று நடந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 

அ.தி.மு.க. பொதுச் செயலாளரான பிறகு கட்சியை பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக உள்கட்சித் தேர்தலை நடத்துவதற்கு அவர் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே மாவட்டம் வாரியாக எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை வைத்து  அனைத்து பதவிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கு அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. 

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள்   ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அ.தி.முக. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். 

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை விரைவாக நடத்தி முடிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.  அதே நேரத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று ஏற்கனவே கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவறுத்தி இருக்கிறார். இது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மாநிலம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்வதற்கும் முடிவு செய்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் இப்போதே தயாராக வேண்டும்.  தி.மு.க. பா.ஜ.க.வை விமர்சிக்கலாம். அதே நேரத்தில் அந்த கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 

நாளை எப்படி இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது, சொல்ல முடியாது.   சட்டமன்ற தேர்தலுக்கு 15 மாதங்களே இருப்பதால் கட்சியினர் தேர்தலை எதிர்கொள்ள  தயாராக இருக்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். பா.ஜ.க. மற்றும் தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம்  எடுத்து சொல்ல வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

அ.தி.மு.க.வை விஜய் விமர்சிக்காதது ஏன் என்று தொடர்ந்து கேட்கிறீர்கள். விமர்சனம் செய்யும் அளவுக்கு எங்கள் கட்சியும் இல்லை, ஆட்சியும் இல்லை. அ.தி.மு.க. தலைவர்கள் மக்கள் போற்றும் ஆட்சியை தான் இதுவரை வழங்கி உள்ளனர். தி.மு.க. அரசை அனைவரும் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  எனவே 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. நிச்சயம் படுதோல்வி அடையும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்.  இவ்வாறு அவர் கூறினார்.",

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து