முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் ஓடும் ரயில் மீது துப்பாக்கிச்சூடு : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      இந்தியா
Gun 2023-10-05

Source: provided

புவனேஸ்வர் : ஒடிசாவில் விரைவு ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நாடு முழுவதும் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களைக் குறிவைத்து கல்வீசுவது, ரயில் தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர், பாறாங்கல் உள்ளிட்ட பொருள்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி செய்வது போன்ற செயல்களில் சமூகவிரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது ஒடிசாவில் ஓடும் ரயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,

டெல்லி ஆனந்த் விஹார்- ஒடிசாவின் புரி இடையிலான நந்தன்கனன் விரைவு ரயில், ஒடிசாவின் பத்ராக் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அடுத்த 5 நிமிஷங்களில் பவுத்பூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ரயிலை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதுடன், இரும்புத் துண்டுகள், கம்பிகள் உள்ளிட்டவற்றையும் வீசினர். இதனால் துப்பாக்கி குண்டுகள் சில, ரயில் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தன.

அதிர்ஷ்டவசமாக பயணிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாயவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில் மீது தாக்குதல் நடத்திய கும்பல், அங்கிருந்து தப்பியோடி விட்டது. ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். பின்னர் கூடுதல் பாதுகாப்புடன் மேற்கண்ட ரயில் புரி நகருக்கு புறப்பட்டுச் சென்றது. குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து