முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை பயங்கரவாதி சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      இந்தியா
Kashmir

குப்வாரா, காஷ்மீரில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

காஷ்மீரின் குப்வாரா மாவட்டதில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.   இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை அங்குள்ள லோலாப் என்ற பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். 

இந்த நடவடிக்கையின்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அந்த நபரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, கையெறி குண்டுகள், துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

இதே போல் காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள கெட்சன் வனப்பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அங்கு தற்போது பாதுகாப்பு படை வீரர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து