முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் கோர விபத்து: புதுமண தம்பதி உட்பட 7 பேர் உயிரிழப்பு

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      இந்தியா
UP 2024-11-16

Source: provided

லக்னோ : உ.பி.யில் நேற்று டெம்போ மீது வேன் மோதிய விபத்தில் புதுமண தம்பதி உட்பட 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த விபத்திற்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் நேற்று முன்தினம் மாலை திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி மற்றும் அவர்களது உறவினர்கள் நேற்று அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள தம்பூர் பகுதியில் இருக்கும் மணமகனின் வீட்டுக்கு வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். 

தேசிய நெடுஞ்சாலை 74-ல் வந்த போது எதிரே வந்த டெம்போ மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 2 வாகனங்களும் அருகில் இருந்த பள்ளம் ஒன்றில் கவிழ்ந்தன. 

மணமக்கள் வந்த வாகனத்தில் 11 பேர் இருந்தனர். அவர்களில் மணமகள், மணமகன், அவருடைய சகோதரர் உள்பட உறவினர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

காயமடைந்த மற்றவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் வேன் டிரைவர் உயிரிழந்தார். அடர்பனி, தெளிவற்ற வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த விபத்திற்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து