முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் : போலீசார் தீவிர விசாரணை

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      சினிமா
Kasthuri-2024-11-04

Source: provided

சென்னை : ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் கடந்த 3-ம் தேதி பிராமணர் சமுதாயத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அவர் அறிவித்தார்.

நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் போலீசில், நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். 

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ், தெலுங்கு மக்களிடையே வன்முறையை ஏற்படுத்த காத்திருக்கும் வெடிகுண்டு போல நடிகை கஸ்தூரி பேசியுள்ளார் என்று கூறி, அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். 

இந்நிலையில் ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆந்திராவில் கஸ்தூரி தலைமறைவாக உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து