முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவண படம் வெளியீடு விவகாரம்: நடிகர் தனுஷின் வீடியோவை பகிர்ந்து விக்னேஷ் சிவன் காட்டமான பதிவு

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      சினிமா
Nayanthara 2024-11-16

Source: provided

சென்னை : ஆவண படம் வெளியீடு விவகாரத்தில் ரூ. 10 கோடி கேட்டதாக நடிகர் தனுஷ் மீது நயன்தாரா குற்றம் சாட்டியுள்ள நிலையில், வாழு வாழவிடு என்று நடிகர் தனுஷின் வீடியோவை பகிர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் காட்டமான பதிவு  ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஓட்டலில் விமர்சையாக நடைபெற்றது. 

அப்போது நெட்பிளிக்ஸ்  ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு திருமண கிளிம்ஸுடன் வெளியானது. நயன்தாராவின் குழந்தை பருவம் முதல் இளம் வயதில் அவர் சந்தித்த வெற்றிகள், துயரங்கள், விக்னேஷ் சிவனுடனான காதல் திருமணம் வரை அனைத்தையும் ஆவணப்படமாக வெளியிடவுள்ளனர்.

 இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், வரும் 18-ம் தேதி நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த ஆவணப் படத்தை வெளியிடவுள்ளது. 

இந்நிலையில் தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே வாழு வாழவிடு என்று தனுஷ் பேசிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.  

வாழு வாழவிடு. இதையெல்லாம் நம்பும் சில அப்பாவி டை ஹார்ட் ரசிகர்களுக்காகவாவது.. மக்கள் மாறுவதற்கும் மற்றவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியைக் காண்பதற்கும் நான் கடவுளை மனதார வேண்டிக்கொள்கிறேன் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து