முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திகை மாதப்பிறப்பு: சபரிமலைக்கு மாலையணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      ஆன்மிகம்
Sabarimala-1 2024-11-16

Source: provided

சென்னை : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் பல்வேறு கோவில்களில் மாலை அணிந்து நேற்று விரதத்தை தொடங்கினர்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 1-ம் தேதி முதல் தை 6-ம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெறும் மண்டல மகர பூஜை உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு மண்டல பூஜைக்காக கார்த்திகை மாத பிறப்பினை முன்னிட்டு சபரிமலையில் நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது.

மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியான நேற்று அதிகாலை மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்கினர். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கோவிலில் விரதத்தை தொடங்கினர்

அதன்படி கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கச்சி நம்பி விநாயகர் கோவில், குமரக்கோட்டம் முருகன் கோவில், நகரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு கருப்பு, நீலம், காவி, உடை அணிந்து வந்த ஐயப்ப பக்தர்கள் துளசி மணி மாலைகளை வாங்கி, கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்து கோவில் அர்ச்சகர்கள் குருசாமிகளிடம் வழங்கி, சரண் கோஷங்களை முழங்க, துளசி மணி மாலையை அணிந்து கொண்டு சபரிமலை யாத்திரைக்கான 48 நாள் விரதத்தினை தொடங்கினர். 

சபரிமலை யாத்திரைக்கு மாலை அணிவிக்க வந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

கோவை மாவட்டம் போத்தனூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பூசாரி பக்தர்களுக்கு மாலை அணிவித்தார்.  48 நாட்கள் மண்டல விரதம் இருந்து, இருமுடி கட்டி, சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க உள்ளனர்.

நெல்லையில் அமைந்துள்ள பாளையம் சாலை குமாரசுவாமி கோவிலில் சபரிமலை செல்லும் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். முதலில் கன்னி ஐயப்பமாா்களும், அதனை தொடா்ந்து ஐயப்ப பக்தா்களும் மாலை அணிந்து கொண்டனா். அனைவரும் சரணகோஷ்களுடன் பஜனை பாடல்கள் பாடினா்.  

தருமபுரியில் உள்ள சீனிவாசராவ் தெருவில் உள்ள ஐயப்ப கோவிலில் நேற்று அதிகாலை பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதே போன்று கோட்டை  மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், சாலை விநாயகர் கோவில், சித்தி விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் அதிகாலையில் முதல் குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து கொண்டு விரதம் இருக்க தொடங்கினர்

இதே போன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி காவி மற்றும் கருப்பு வேஷ்டி அணிந்து நீண்ட வரிசையில் நின்று குருசாமி, குருக்கள் கைகளால்  மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். 

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலையிலே திருச்செந்தூர்  கோவிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்  கடலில் புனித நீராடி புத்தாடை அணிந்து கோவில் வளாகம், தூண்டுகை விநாயகர் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் குருசாமி தலைமையில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதே போல் தமிழகம் முழுவதிலும் உள்ள பிரசித்தி  பெற்ற கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து