முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய சீனியர் ஹாக்கியில் ஒடிஷா வெற்றி: கோப்பையை வழங்கினார் : துணை முதல்வர் உதயநிதி

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      தமிழகம்
Udayanidhi-1 2024-11-16

Source: provided

சென்னை : ஒடிசா - அரியானா அணிகள் மோதிய தேசிய சீனியர் ஹாக்கி இறுதிப்போட்டி நேற்றஉ நடைபெற்றது. இதில் வெற்றிப்பெற்ற ஒடிசா அணிக்கு கோப்பையை வழங்கி துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார்.

14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. 30 மாநில அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஒடிசா - அரியானா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் ஒடிசா - அரியானா அணிகள் மோதிய இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஒடிசா அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில், வெற்றி பெற்ற ஒடிசா அணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையை வழங்கினார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 14-வது தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. ஒடிசா அணிக்கு கோப்பையை வழங்கி சிறப்பான வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன். 

முதல்வர் மு.க.ஸ்டாலினின் திறமையான தலைமையின் கீழ் , திராவிட மாடல் அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக இந்த போட்டியை நடத்தியதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது. இந்த போட்டியில் திறமையை வெளிப்படுத்திய அனைத்து வீரர்களுக்கும், அணிகளுக்கும் எனது வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து