முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கில்லுக்கு ரவிசாஸ்திரி ஆதரவு

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      விளையாட்டு
Ravi-Shastri 2023 04 12

Source: provided

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது.

இந்நிலையில் முதல் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் வேண்டாம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அது தேர்வாளர்களுக்கு மிகவும் கடினமான முடிவாக இருக்கும். அங்கே நீங்கள் சுப்மன் கில்லை அனுப்பலாம். ஏனெனில் ஏற்கனவே அவர் ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரராக விளையாடியுள்ளார். இல்லையெனில் நீங்கள் வேறு வீரரை களமிறக்க வேண்டும். அபிமன்யு ஈஸ்வரன் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடவில்லை. இருப்பினும் அவரும் ராகுலும் வலைப்பயிற்சியில் எவ்வாறு பேட்டிங் செய்கிறார்கள் என்பது முக்கியம். சுப்மன் கில் நமக்கு நல்ல தேர்வாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

____________________________________________________________

சாம்சன் குறித்து சசி தரூர்

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.  முன்னதாக இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அடித்த சதம் டி20 கிரிக்கெட்டில் நடப்பாண்டில் (2024) அவரது 3-வது சதமாக பதிவானது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். சஞ்சு சாம்சன் தற்போது அணியின் தொடக்க ஆட்டக்காரராக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் 'அடுத்த டோனி' என அவரை குறிப்பிட்ட தனது டுவிட்டர் பதிவை நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மீண்டும் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், "கேரள ரஞ்சிக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த ரோகன் பிரேம் மற்றும் 15 வயதேயான சஞ்சு சாம்சனை (அடுத்த டோனி) கொஞ்சம் பாருங்கள்" என அதில் சசி தரூர் தெரிவித்திருந்தார். அந்த டுவீட் பதிவை தற்போது பகிர்ந்துள்ள அவர், "15 ஆண்டுகளுக்குப் பிறகு 'அப்போதே நான் சொன்னேன்' என்று சொல்வது மிகவும் அற்புதமானது" என தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் சஞ்சு சாம்சன், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டேக் செய்துள்ளார்.

____________________________________________________________

வருத்தம் தெரிவித்த இந்திய வீரர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்திலிருந்து குணமடைந்த முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஷர்துல் தாகூருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்காக நான் தேர்வு செய்யப்படாதது குறித்து வருத்தத்துடன் பேசியுள்ள ஷர்துல் தாகூர் கூறுகையில், ஆஸ்திரேலியா தொடர் குறித்து யாரும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை. என்னுடைய உடற்பகுதி முன்பை விட சிறப்பாக இருக்கிறது. ஆஸ்திரேலியா தொடர் என்பது மிகவும் பெரிய தொடர். எனவே அங்கிருந்து எப்போது வேண்டுமானாலும் எனக்கு அழைப்பு வரலாம். அதேபோன்று இங்கிலாந்து அணி இங்கு வந்து இந்திய மண்ணில் விளையாட இருக்கிறது. அதற்கு அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் இருக்கிறது இப்படி அடுத்தடுத்த பெரிய தொடர்கள் இருப்பதால் நிச்சயம் ஏதாவது ஒரு தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும்" என்று கூறினார்.

____________________________________________________________

ஆஸ்திரேலியா திரில் வெற்றி

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஒருநாள் கிரிக்கெட்டில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 ஆட்டம் பிரிஸ்பென்னில் நேற்று நடைபெற்றது .

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அந்த அணியின் தொடக்க வீரர் மேதிவ் ஷார்ட் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹிரிஸ் ரால்ப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி  இறுதியில் 19.4 ஓவர்கள் முடிவில் 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தானை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா திரில் வெற்றிபெற்றது.

____________________________________________________________

காலிறுதிக்கு போர்ச்சுகல் தகுதி 

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில், நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் - போலந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் போர்ச்சுகலில் உள்ள போர்டோ நகரில் நடைபெற்றது பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல்  போர்ச்சுகல் அணி சிறப்பாக விளையாடியது இதனால் ஆட்ட நேர முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்று அணி காலிறுதிக்கு முன்னேறியது. போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ 2 கோல் ,ரபேல் லயோ ,புருனோ பெர்னாண்டஸ், பெட்ரோ நேட்டோ ஆகியோர் தலா கோல் அடித்தனர் . போலந்து அணியில் டொமினிக் ஒரு கோல் அடித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து