முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் பிரதமரின் நெதன்யாகு வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      உலகம்
Israel 2024-11-17

Source: provided

ஜெருசலேம் : கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால், இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது 2வது முறையாக மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. இதனால் இஸ்ரேல் பிரதமருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வருடங்களாக மேலாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புகளை அழிக்கும் வரை அவர்கள் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த அக்.,16ம் தேதி இஸ்ரேலில் வடக்கு நகரமான சிசோரியாவில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் எந்த சேதமும் ஏற்படவில்லை.

தற்போது, 2வது முறையாக மீண்டும் இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கார்ட்ஸ் தெரிவித்தார். பிரதமர் வீட்டில் நடந்த தாக்குதலில் இரண்டு வெடிகுண்டுகள் அவரது தோட்டத்தில் விழும் சி.சி.டி.வி., காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் அதிபர் ஐசக் கார்க் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர், 'இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்' என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை 2வது முறையாக கொல்ல சதி நடந்துள்ளது. இதனால் பிரதமர் வீட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் உஷாராக உள்ளனர் என பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து