முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: பவுனுக்கு 480 ரூபாய் அதிகரிப்பு

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024      தமிழகம்
Gold 2024-04-06

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து நேற்று விற்பனையானது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தங்கம் தவிர்த்த முதலீடுகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், தங்கத்தின் விலை கடந்த வாரங்களில் மட்டும் ரூ.3,000க்கும் கூடுதலாக குறைந்தது. இது விஷேசங்களுக்கு தங்க நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த வார வர்த்தகத்தின் முதல் நாளான நேற்று (நவ.,18) தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.55,960க்கு விற்பனையானது. இதன் மூலம், தங்கம் விலை மீண்டும் 56 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து, ரூ.6,995க்கு விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இல்லாமல், ரூ.99க்கு விற்பனையானது. 

கடந்த 5 நாட்களின் தங்கம் விலை நிலவரம் (கிராமில்) நவ., 18ல் - ரூ.6,995 - ரூ.60 உயர்வு, நவ.,17ல் - ரூ.6,935 - விலையில் மாற்றம் இல்லை, நவ.,16ல் - ரூ.6,935 - ரூ.10 குறைவு, நவ.,15ல் - ரூ.6,945 - ரூ. 10 அதிகரிப்பு, நவ.,14ல் - ரூ.6,935 - ரூ.110 குறைந்து விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து