முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டிற்கு அதிக வரிப் பகிர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024      தமிழகம்
OPS 2024-11-17

Source: provided

சென்னை : தமிழ்நாட்டிற்கு அதிக வரிப் பகிர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநிலங்களுக்கிடையேயான நிதிப் பகிர்வினை நிதிக் குழு மேற்கொண்டு வருகிறது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாத முதல் நிதிக் குழுக் காலத்தில், வருமான வரி மூலமாக 15.25 சதவீதம் வரிப் பகிர்வும், மத்திய கலால் வரி மூலமாக 16.44 சதவீதம் வரிப் பகிர்வும் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, இரண்டாவது நிதிக் குழுக் காலத்தில் வருமான வரி மூலமாக 8.40 சதவீதம் வரிப் பகிர்வும், மத்திய கலால் வரி மூலமாக 7.56 சதவீதம் வரிப் பகிர்வும் கிடைத்தது. கிட்டத்தட்ட இதே அளவுக்கு தொடர்ந்து வந்த நிதிப் பகிர்வு, பத்தாவது நிதிக் குழுக் காலத்தில் 6.637 சதவீதமாகவும், பதினோறாவது நிதிக் குழுக் காலத்தில் 5.385 சதவீதமாகவும், பன்னிரெண்டாவது நிதிக் குழுக் காலத்தில் 5.305 சதவீதமாகவும், பதின்மூன்றாவது நிதிக் குழுக் காலத்தில் 4.969 சதவீதமாகவும், பதினான்காவது நிதிக் குழுக் காலத்தில் 4.023 சதவீதமாகவும், பதினைந்தாவது நிதிக் குழுக் காலத்தில் 4.189 சதவீதமாகவும், தற்போது 4.079 சதவீதமாகவும் குறைந்துவிட்டது.

தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வு குறைந்து கொண்டே வருவதற்கான முக்கியக் காரணங்கள் என்ன என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். முதல் ஏழு நிதிக் குழு வரை, மக்கள் தொகை என்ற காரணிக்கு 80 முதல் 90 சதவீதம் வரை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக, மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய வரிப் பகிர்வு கிடைத்து வந்தது.

2000-ம் ஆண்டு அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலமாக அனைத்து வரிகளும் வரிப் பகிர்விற்குள் எடுத்துக் கொண்டு வரப்பட்ட நிலையில், Cess and Surcharge-க்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதனை வரிப் பகிர்வுக்குள் கொண்டு வந்தால், அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதல் வரிப் பகிர்வு கிடைக்கும். இதனையும், பதினாறாவது நிதிக் குழுவிடம் தி.மு.க. அரசு வலியுறுத்த வேண்டும். 

முதல்வர் நிதித்துறை அதிகாரிகளுடனும், நிதி வல்லுநர்களுடனும் கலந்து ஆலோசித்து, தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வை அதிகமாக பெறுவதற்கான வழிமுறைகளை பதினாறாவது நிதிக் குழுவிடம் எடுத்துரைத்து, 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக வரிப் பகிர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து