எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி பஞ்சாப் மாநிலம் வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருந்தது.ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
ஏற்கனவே ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தான் பயணிப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி விலகினாலும் பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
________________________________________________________________________
தென் ஆப்பிரிக்க வீரருக்கு அபராதம்
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 4வது டி20 போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு தெரிவித்ததற்காக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜிக்கு ஐ.சி.சி கண்டனம் தெரிவித்ததோடு, அபாராதமும் விதித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 4வது போட்டியில் தென் ஆப்பிரிக்க பவுலர் ஜெரால்ட் கோட்ஜி 3 ஓவர்கள் பந்துவீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. ஆட்டத்தின் 15 ஓவரில் ஜெரால்ட் கோட்ஜி வீசிய பந்துக்கு நடுவர் 'வைட்' என்று கூறியுள்ளார். இதற்கு கோட்ஜி நடுவரிடம் எதிர்ப்பு தெரிவித்து முறையிட்டதாக கூறப்படுகிறது. சர்வதேச போட்டியின் போது நடுவர்களின் முடிவில் கருத்து வேறுபாடு கூறுவது தொடர்பான ஐ.சி.சி நடத்தை விதி 2.8 ஐ கோட்ஜி மீறியது கண்டறியப்பட்டு அவருக்கு இரண்டு தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. 24 வயதான ஜெரால்ட் கோட்ஜி, அவர் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதால் போட்டிக் கட்டணத்தில் இருந்து அவருக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
________________________________________________________________________
பெருவை வீழ்த்திய அர்ஜென்டினா
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடக்கின்றன.
இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா - பெரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் - உருகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதேபோல் பொலிவியா - பராகுவே ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 days ago |
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற 4 அணிகள் இடையே போட்டி
02 Dec 2024துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியா உள்ளிட்ட 4 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
-
வங்கதேசம் 164 ரன்னில் அவுட்
02 Dec 2024வங்காளதேசம் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
-
திருவண்ணாமலையில் 3-வது இடத்தில் மண் சரிவு
02 Dec 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் 3-வது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது அங்கு பொதுமக்கள் இடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்: புதுச்சேரியில் குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மழை நிவாரண நிதி : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
02 Dec 2024புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் கோரத்தாண்டவத்தால் புதுச்சேரியில் விடிய, விடிய கனமழை கொட்டி எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில், அங்கு குடும்ப அட்டைதாரர்கள் அனைவர
-
5 ரன்களில் 4 விக்கெட: 46 ஆண்டுக்கு பிறகு மே.இ.தீவுகள் வீரர் ஜெய்டன் சீல்ஸ் புதிய சாதனை
02 Dec 2024கிங்ஸ்டன் : வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்களில் 4 விக்கெட எடுத்து 46 ஆண்டுக்கு பிறகு மே.இ.தீவுகள் வீரர் ஜெய்டன் சீல்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த
-
புயல் பாதித்த தமிழகத்தில் புணரமைப்பு நடவடிக்கைகளுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாயை உடனே விடுவிக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
02 Dec 2024சென்னை : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 2 ஆயிரம் கோடி ரூபாயை உடனே விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள முதல்வர் ம
-
இலங்கையில் கனமழை: பலி எண்ணிக்கை 20 ஆனது
02 Dec 2024கொழும்பு : இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-12-2024.
03 Dec 2024 -
காய்ச்சல்: மருத்துவமனையில் ஏக்நாத் ஷிண்டே அனுமதி
03 Dec 2024