முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும்: ஆசியான் மாநாட்டில் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2024      உலகம்
Rajnath-Singh 2023-11-14

லாவோஸ், சர்வதேச பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியா பேச்சுவார்த்தையை விரும்புகிறது. சர்வதேச சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஆசியான் மாநாட்டில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.  

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசுக்கு சென்றுள்ளார். அங்கு நேற்று ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது: 

எல்லை தகராறுகள், வர்த்தக ஒப்பந்தங்கள் போன்ற உலகளாவிய சவால்களை அணுகுவதில் அமைதியான பேச்சுவார்த்தையை இந்தியா விரும்புகிறது.  சர்வதேச சட்டத்துடன் முழுமையாக ஒத்துப்போக வேண்டும். 

அவற்றை கடைப்பிடிக்க வேண்டும். நாடுகள் பரஸ்பரம் கருத்துகளை மதிக்கும் போது மட்டுமே, உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வுகளை அடைய முடியும் என இந்தியா நம்புகிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதியை மேம்படுத்துவதற்கு இந்தியா துணை நிற்கிறது. இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து