முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி ஏதும் தரவில்லை தமிழ்நாடு அரசு விளக்கம்

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2024      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை: மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி எதுவும் வழங்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க மத்திய அரசு டெண்டர் விடுத்தது. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்த நிலையில், மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி எதுவும் வழங்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

"மத்திய அரசால் 24.06.2024-ல் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க ஏல அறிவிப்பு செய்யப்பட்டு, 07.11.2024 அன்று இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தினை தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்நிறுவனத்திடமிருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை எனவும், அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 10 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 8 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 8 hours ago
View all comments

வாசகர் கருத்து