முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல நடிகை சீதா வீட்டில் 4.5 பவுன் நகை திருட்டு: வேலைக்கார பெண்களிடம் போலீசார் விசாரணை

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      சினிமா
Seetha 2024-11-22

Source: provided

சென்னை : பிரபல நடிகை சீதா வீட்டின் படுக்கை அறையில் வைத்திருந்த 4.5 பவுன் நகை திருடு போனது தொடர்பாக அவரது வீட்டில் பணியாற்றும் 2 வேலைக்கார பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை சாலிகிராமம் புஷ்பா காலனியில் நடிகை சீதா(56) வசித்து வருகிறார். பிரபல நடிகையான இவர், நடிகர் பார்த்திபனின் முன்னாள் மனைவி ஆவார். தனது கணவரை பிரிந்து சீதா தற்போது தனியாக வசித்து வருகிறார். 

இதற்கிடையே கடந்த 31-ம் தேதி சீதாவின் சகோதரர் மனைவி அணிந்து இருந்த 4.5 பவுன் நகையை கழுற்றி ஒரு பையில் படுக்கையில் வைத்துள்ளார். அதன் பிறகு பார்த்த போது நகை மாயமாகி இருந்தது. 

இது குறித்து சீதா தனது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வரும் சவுந்தரி மற்றும் 4 ஆண்டுகளாக பணியாற்றி வரம் சந்தியா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்படி போலீசார் வேலைக்கார பெண்களான சவுந்தரி மற்றும் சந்தியாவிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், நகை திருடியது தொடர்பாக போலீசார் 2 வேலைக்கார பெண்கள் மீது  வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் பார்த்திபன் தனது அலுவலகத்தில் இருந்து 12 பவுன் மாயமானதாக புகார் அளித்திருந்த நிலையில், முன்னாள் மனைவியும் நடிகையுமான சீதா நகை மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து