முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அரசின் திட்டங்களை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      தமிழகம்
Udayanidhi 2024-11-24

Source: provided

நாகை : தி.மு.க. அரசின் திட்டங்களை பார்த்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது என்று நாகையில் நடந்த திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். 

நாகையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க. கூட்டணி உடையாதா? என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்திருக்கிறார். தி.மு.க. கூட்டணி கொள்கை கூட்டணி. வெற்றி கூட்டணி. மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய கூட்டணி. 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக ஒரு  கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைகின்றனர். இதனை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. 

மேலும் அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதாலும் அவருக்கு வயிற்றெரிச்சல். வருகின்ற 2026 தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றியை மக்கள் அளித்தார்கள். 

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவோம். நாகை மாவட்டம் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நிறைந்த மாவட்டம். மழை, வெள்ள காலத்தில் மக்களை பாதுகாக்கும் காவலனாக மீனவர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago
View all comments

வாசகர் கருத்து