முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார விடுமுறை: குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      தமிழகம்
Kumari 2024-11-01

Source: provided

குமரி :  ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையான நேற்று  கன்னியாகுமரியில்  ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் அதிகளவில் குவிந்தனர். 

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

இந்த காலகட்டத்தில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் அதிகமாக வருவார்கள். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. 

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில்  ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் அதிகளவில் குவிந்தனர். 

முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  

தொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து ரசித்தனர். இதனால் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

இது போல் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

 சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  மேலும் கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago
View all comments

வாசகர் கருத்து