முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுமுறை நாள்: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      ஆன்மிகம்
Sabarimala 2024-11-24

Source: provided

திருவனந்தபுரம் : விடுமுறை நாளான நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலை 7 மணிக்குள் 18 ஆயிரத்து 648 பக்தர்கள் புனித படிகளில் ஏறியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. 

அன்று முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இதனை அதிகரிக்க முடிவு செய்த போது, பக்தர்கள் கூட்டம் குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலை 7 மணிக்குள் 18 ஆயிரத்து 648 பக்தர்கள் புனித படிகளில் ஏறியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 87 ஆயிரத்து 216 பேர் மலை ஏறியுள்ளனர். 

விடுமுறை தினமான நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் தரிசனம் செய்தவுடன் உடனடியாக திரும்பிச் செல்ல தொடங்குவதாகவும், சன்னிதானத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் வரும் நாட்களில் இந்த நெரிசல் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago
View all comments

வாசகர் கருத்து