முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய மாணவர் படையில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும் : பிரதமர் மோடி அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      இந்தியா
MODI 2023 04 30

Source: provided

புதுடெல்லி : தேசிய மாணவர் படையில்  அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியம் என்று நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். 

நேற்று நடந்த 116-வது மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவுக்கு கயனா நாட்டிற்கும் இடையிலான கலாசாரம் மற்றும் ராஜதந்திர உறவுகள் வலுவாக உள்ளது. இந்தியாவில் இருந்து நீண்ட தொலைவில் இருக்கும் கயானாவில் மினி பாரத் உள்ளது. 

சுமார் 180 ஆண்டுக்கு முன், இந்தியர்கள் கயானாவிற்கு வயல்களில் வேலை செய்ய அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று கயானாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளனர். 

என்.சி.சி. எனப்படும் தேசிய மாணவர் படையில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியம். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஆற்றல், திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பு அவசியம்.  இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago
View all comments

வாசகர் கருத்து