முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலநிலை நிதி ஒப்பந்தத்திற்கு 300 பில்லியன் டாலர் குறைவு : இந்தியா நிராகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      உலகம்
INDIA 2024-04-17

Source: provided

பாகு (அசர்பைஜான்) : 300 பில்லியன் டாலர் என்பது மிக குறைவு என்று காலநிலை நிதி ஒப்பந்தத்தை இந்தியா நிராகரித்துள்ளது.

வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நிர்வகிப்பதற்கும், பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் தேவையான நிதியுதவிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வளர்ந்த நாடுகள் வழங்குகின்றன. இதற்காக ஐ.நா. காலநிலை நிதி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதி தொகுப்பு தொடர்பாக ஐ.நா. காலநிலை மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அவ்வகையில், காலநிலை நிதியில் இருந்து ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் வழங்க கடந்த 2009-ல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அசர்பைஜானில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாநாட்டின் நிறைவு நாளான நேற்று காலநிலை நிதி தொகுப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், காலநிலை நிதி தொகுப்பை மூன்று மடங்காக உயர்த்த தீர்மானிக்கப்பட்டது. அதாவது, காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கு 2035-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை இந்தியா நிராகரித்தது. மாநாட்டின் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் பொருளாதார விவகாரத்துறை ஆலோசகர் காந்தினி ரெய்னா பேசும்போது, காலநிலை நிதி ஒப்பந்த செயல்முறை நியாயமற்றது என்றும், இந்த நிதி மிகக் குறைவு என்றும் கூறினார். அவர் மேலும் பேசியதாவது., ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன்னர் நாங்கள் அறிக்கை வெளியிட விரும்புவதாக கோரிக்கை விடுத்திருந்தோம். இருப்பினும், மேடையில் வைத்து மட்டும் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago
View all comments

வாசகர் கருத்து