முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறை: ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம் ஷ்ரேயாஸ் அய்யர் ரூ .26.75 கோடிக்கு பஞ்சாப் எடுத்தது

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      விளையாட்டு
24-Ram-50

Source: provided

துபாய்: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி.ரூ .20.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இறுதியாக ஏலம் எடுத்த நிலையில், ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தியது டெல்லி அணி. ரூ.27 கோடியாக ஏலத் தொகையை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உயர்த்திய நிலையில், அந்த தொகைக்கு டெல்லியால் ஈடு கொடுக்க முடியாததால் பண்ட்-ஐ லக்னோஅணியே ஏலத்தில் எடுத்தது. ஷ்ரேயாஸ் அய்யரை ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ .26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது

577 வீரர்கள்... 

10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நடைபெறுகிறது. இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 577 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. ஏல நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யபடுகிறது. ஜியோ சினிமா செயலியிலும் ஏல நிகழ்ச்சியை காணலாம்.

ரூ.27 கோடிக்கு... 

லியம் லிவிங்ஸ்டனை ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூரு அணி. இதற்கு முன் அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். யுவேந்திர சாஹலை ரூ.18 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ரூ.7.50 கோடிக்கு டேவிட் மில்லரை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி. ரூ.10 கோடிக்கு முகமது ஷமியை ஏலத்தில் எடுத்தது ஐதராபாத் அணி. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி.ரூ .20.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இறுதியாக ஏலம் எடுத்த நிலையில், ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தியது டெல்லி அணி. ரூ.27 கோடியாக ஏலத் தொகையை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உயர்த்திய நிலையில், அந்த தொகைக்கு டெல்லியால் ஈடு கொடுக்க முடியாததால் பண்ட்-ஐ லக்னோஅணியே ஏலத்தில் எடுத்மிட்சல் ஸ்டார்க்கை தது .

மிட்சல் ஸ்டார்க்...

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை ரூ . 11.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி  அணி.கடந்த சீசனில் ரூ .24.75 கோடி என்ற உச்சபட்ச விலைக்கு கொல்கத்தா அணி இவரை ஏலத்தில் எடுத்திருந்தது.  இங்கிலாந்து வீரர் ஜோஷ் பட்லரை ரூ .15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது  ஷ்ரேயாஸ் அய்யரை ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ .26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர் ரபடாவை ரூ .10.75 கோடிக்கு  குஜராத் அணி ஏலத்தில் வாங்கி உள்ளது  ஆர்.டி.எம். கார்டு மூலம் பஞ்சாப் அணி அர்ஷிதீப் சிங்கை ரூ .18 கோடிக்கு மீண்டும் ஏலத்தில் வாங்கி உள்ளது

உடைக்கப்பட்ட சாதனை

மெகா ஏலம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் செட்1-ல் இடம் பெற்றிருந்த வீரர்களுக்கான ஏலம் முடிவடைந்துள்ளது. அதில் இடம்பெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகையான ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

ஆனால் சில நிமிடங்களிலேயே டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்ட் பெயர் ஏலத்தில் வந்தது. அவரை ஏலத்தில் எடுக்க நிறைய அணிகள் ஆர்வம் காட்டின. ஒரு கட்டத்தில் லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவின. இறுதியில் லக்னோ அணி ரூ.27 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்ற ஸ்ரேயாஸ் ஐயரின் சாதனையை சில நிமிடங்களிலேயே ரிஷப் பண்ட் முறியடித்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago
View all comments

வாசகர் கருத்து