முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள்: டி20 கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      விளையாட்டு
24-Ram-53

Source: provided

இந்தூர்: 5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் இந்திய வீரராக மாபெரும் ஹர்திக் பாண்ட்யா சாதனை படைத்துள்ளார்.

குஜராத் அணி...

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் பரோடா - குஜராத் அணிகள் இந்தூரில் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பரோடா 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பரோடா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 74 ரன்கள் எடுத்தார். ஐ.சி.சி தரவரிசையில் உலகின் நம்பர் 1 டி20 ஆல்ரவுண்டராக இருக்கும் பாண்ட்யா அபாரமாக ஆடி அணியை வெற்றி பெறச்செய்தார்.

டி20 கிரிக்கெட்டில்...

இந்த 74 ரன்களையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் அவர் 5067 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் பந்து வீச்சில் அவர் 180 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பாண்ட்யா படைத்துள்ளார். இதனால் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தப்பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 3684 ரன் மற்றும் 225 விக்கெட்டுகள் எடுத்து 2வது இடத்திலும், அக்சர் படேல் 2960 ரன் மற்றும் 227 விக்கெட்டுகள் எடுத்து 3வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago
View all comments

வாசகர் கருத்து