எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே, அவர் ராஜ்பவனில் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 230+ தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றி பெற்ற நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பு நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று (செவ்வாய்க்கிழமை) தனது பதவியை ராஜினமா செய்தார். ராஜ்பவனில் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அப்போது அவருடன் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இருந்தார்.
பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளதால், அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிண்டே ராஜினாமா நிகழ்ந்துள்ளது. புதிய அரசு அமையும் வரை ஷிண்டே காபந்து முதல்வராக தொடர்வார் எனத் தெரிகிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஷிண்டே அணி 81, அஜித் பவார் அணி 59 தொகுதிகளில் போட்டியிட்டன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங் கிரஸ் 101, உத்தவ் தாக்கரே அணி 95, சரத் பவார் அணி 86 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. பாஜக 132 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனாவின் ஷிண்டே அணி 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 230+ தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
கோப்ரி-பச்பகாடி தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றார். துணை முதல்வர்களான தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூர் தெற்கு மேற்கு தொகுதியிலும், அஜித் பவார், பாராமதி தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
வெற்றி உறுதியான நிமிடம் முதலே அடுத்த முதல்வர் யார் என்பதே மகாராஷ்டிரா அரசியல் களத்தின் பரபரப்புச் செய்தியாக இருந்தது. பாஜக பிரம்மாண்ட பெரும்பான்மையைப் பெற்றதால் ஏற்கெனவே முதல்வராக இருந்த அனுபவம் கொண்ட பாஜக மூத்த தலைவர் பட்னாவிஸே முதல்வராக்கப்பட வேண்டும் என்று பாஜகவில் கோரிக்கைகள் வலுத்தது. ஷிண்டே தரப்பும் முதல்வர் பதவியில் குறியாக இருந்ததால் எந்த ஒரு தெளிவான அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்துள்ளார். ஆனாலும் கூட அடுத்த முதல்வர் பற்றி வெளிப்படையான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. விரைவில் முதல்வர் யார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டும். பதவியேற்பு நாளும் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பாஜகவினர் மத்தியில் அதிகாரித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2024.
26 Nov 2024 -
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
நவரச கலைக்கூடம் வழங்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே
26 Nov 2024நவரச கலைக்கூடம்" என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படத்திற்கு "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற த
-
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
அசோக்குமார் நடிக்கும் லாரா
26 Nov 2024காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார்.
-
கார்த்தி வெளியிட்ட மிஸ் யூ ட்ரெய்லர்
26 Nov 20247 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’.
-
பராரி விமர்சனம்
26 Nov 2024திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது சாதி ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர்.
-
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024