முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் பதவியேற்பு: வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா திரும்ப பல்கலைக் கழகங்கள் அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      உலகம்
Trump 2024-11-30

Source: provided

 

வாஷிங்டன்: டிரம்ப் பதவியேற்பு விழாவை முன்னிட்டு வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா திரும்ப பல்கலைக் கழகங்கள் அறிவுறுத்தி வருகின்றன.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக  ஜனவரி 20-ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார்.

அதிபராக  பதவியேற்ற பின்னர், நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து டிரம்ப் அறிவித்து வருகிறார். இந்த நிலையில், டிரம்ப் பதவியேற்பை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களில், தற்போது சொந்த நாட்டிற்கு சென்றுள்ள மாணவர்களை உடனடியாக அமெரிக்காவிற்கு திரும்புமாறு அந்தந்த கல்லூரிகளின் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர் சர்வதேச பயணங்கள் தொடர்பாக கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே இத்தகைய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க பல்கலைக் கழங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 54 சதவீதம் பேர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று அமெரிக்க அரசின் கல்வி மற்றும் கலாசார விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து