எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததாக எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு உரிமம் அளித்துள்ளது. இந்த கிராமங்களில் வாழக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதரம் இந்த சுரங்கப் பணிகளால் பாதிக்கப்படும் என்பதால், இந்தப் பகுதி மக்கள் இதை எதிர்த்து போராட்டங்களை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், மேலூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடிய எந்த சுரங்கப் பணிகளுக்கும் தமிழக அரசு எப்போதும் அனுமதி அளிக்காது என்று உறுதியளித்து, இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இதனை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அப்பகுதி மக்களும் தமது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். முதல்வரின் இந்த உறுதியான நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதை சகிக்க முடியாத சிலர், மத்திய அரசின் இந்த சுரங்க உரிமத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததாக, விஷமத்தனமான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
மேலும், இந்த உரிமத்தை வழங்குவதற்கு முன்பாக மாநில அரசின் கருத்துக்களைப் பெற்றதாக மத்திய அரசும் தவறான தகவலை தெரிவித்துள்ளது. இது குறித்த உண்மை நிலையை விளக்கிட விரும்புகின்றேன். கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், முக்கிய கனிமவளங்களை ஏலம் விடுவது தொடர்பாக கனிமக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மத்திய அரசு தெரிவித்த உடனேயே, 3.10.2023 நாளன்று, மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில், தமிழக அரசின் எதிர்ப்பினை தெளிவாக தெரிவித்தேன்.
ஆனால், 2.11.2023 அன்று மத்திய சுரங்கத்துறை அமைச்சர் இதற்கு அளித்த பதிலில், உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்ட பிறகே இந்த ஏலம் விடப்படுவதாகவும், தேசிய அளவிலான தேவைகளை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் இந்த கொள்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு நமது எதிர்ப்புகளை நிராகரித்தார்.
இதனைத் தொடர்ந்து மதுரை மேலூர் பகுதியில் உள்ள நிலங்களை பற்றிய விவரங்கள் மத்திய அரசால் கேட்கப்பட்ட போதும், உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள அரிட்டாபட்டி பகுதியானது ஒரு பல்லுயிர் பெருக்க வரலாற்றுத் தலம் என்பதை சுட்டிக்காட்டினோம். இவை எவற்றையுமே கருத்தில் கொள்ளாத மத்திய அரசு ஏலம் விட்டு டங்ஸ்டன் உரிமத்தை மேற்கூறிய நிறுவனத்திற்கு அளித்தது.
தற்போது மக்களுடைய எதிர்ப்பையும் முதல்வரின் உறுதியான நிலைப்பாட்டினையும் கண்டு மிரண்டு, மத்திய அரசும், அதனோடு சேர்ந்து இரட்டை வேடம் போடக்கூடிய எதிர்க்கட்சிகளும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த சுரங்க ஏலத்துக்கு தமிழக அரசு தனது ஒப்புதலை தெரிவித்ததாக பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றன. இவை எதையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 days ago |
-
8 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்றனர்
02 Dec 2024 -
திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து இ.பி.எஸ். வேதனை
02 Dec 2024 -
சொர்க்கவாசல் விமர்சனம்
02 Dec 2024ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் Swipe Right Studios மற்றும் Think Studios இணைந்து தயாரித்துள்ள படம் சொர்க்கவாசல்.
-
எஸ்.ஜே.சூர்யாவுக்கு டாக்டர் பட்டம்
02 Dec 2024சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 15வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா கலந்து கொண்டு நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.
-
டிச.20-ல் வெளியாகும் விடுதலை பாகம்-2
02 Dec 2024வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து, கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை பாகம்-1'.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-12-2024.
02 Dec 2024 -
ட்ரூ விஷன் கதைகள் - 6-ம் தொகுதி வெளியீடு
02 Dec 2024இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதிய
-
சைலண்ட் திரை விமர்சனம்
02 Dec 2024SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம் சைலண்ட்.
-
கனமழையால் பரசன் ஏரியில் உடைப்பு: கிருஷ்ணகிரி அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்
02 Dec 2024கிருஷ்ணகிரி:
-
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரிக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
02 Dec 2024சென்னை: