முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் 2025 சீசன்: கொல்கத்தா அணி புதிய கேப்டனாக ரஹானே..?

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      விளையாட்டு
Rahane -2024-12-02

Source: provided

கொல்கத்தா : ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா அணி புதிய கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.1.50 கோடிக்கு...

அடுத்தாண்டு கோடை கால விடுமுறை நாள்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ‘இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்)’ தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் தாங்கள் விரும்பும் வீரர்களை கடந்த மாதம் இரு நாள்களாக நடைபெற்ற மெகா ஏலத்தில் பல கோடிகளை கொடுத்து எடுத்துக் கொண்டன. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியில் கடந்த சீசன்களில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியில் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர் அஜிங்க்ய ரஹானே இம்முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(கேகேஆர்) அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவரை ரூ. 1.50 கோடி கொடுத்து நடிகர் ஷாருக் கானின் கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

புதிய கேப்டனாக...

கடந்த சீசன்களில் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணியல் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவரை ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த நிலையில், கேகேஆர் அணியில் கேப்டன் பொறுப்பு யாருக்கு? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரை ரூ. 23.75 கோடி கொடுத்து கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்துள்ள போதும், அவரை விடுத்து ரஹானேவையே கேப்டனாக்க முனைப்பு காட்டி வருவதாக கேகேஆர் அணி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

90 சதவிகிதம் உறுதி...

இது குறித்து அந்த அணி தரப்பிலிருந்து ஒருவர் கூறியதாவது,“கேகேஆர் அணியின் புதிய கேப்டனாக அஜிங்க்யா ரஹானே வழிநடத்துவார் என்பது 90 சதவிகிதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல். அணியை வழிநடத்தும் பொறுப்பு ரஹானேவுக்கு இருப்பதை ஒரு காரணமாக கருத்திற்கொண்டே அவர் இம்முறை கேகேஆர் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து