முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சி ஆட்டத்தில் வெற்றி: கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சி

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      விளையாட்டு
India 2024-05-11

Source: provided

அடிலெய்ட், : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கிடைத்த வெற்றி அற்புதமானது என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2 நாள் போட்டி...

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி (பகல்-இரவு போட்டி) தொடங்குகிறது. இப்போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் மோதும் 2 நாள் பகல்-இரவு பயிற்சி ஆட்டம் கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் நாளில் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. 2-வது மற்றும் கடைசி நாளான நேற்று 46 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

இந்தியா வெற்றி...

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி 43.2 ஓவர்களில் 240 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. கோன்ஸ்டாஸ் (107 ரன்) சதம் அடித்தார். இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் விளையாடிய இந்தியா 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்தியா வெற்றி பெற்றது.

அற்புதமாக இருந்தது... 

பயிற்சி ஆட்டத்தில் பெற்ற வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:- இப்போட்டியில் இருந்து கிடைத்த வெற்றி அற்புதமாக இருந்தது. அணியாக நாங்கள் விரும்பியது எங்களுக்கு கிடைத்தது. முழுமையான போட்டி நடைபெறாதது கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. ஆனால் கிடைத்த நேரத்தை நாங்கள் முடிந்தளவுக்கு அதிகமாக பயன்படுத்தினோம். அதில் எங்களுக்கு தேவையான விஷயங்கள் கிடைத்தன. ஆஸ்திரேலியாவில் எங்களுக்கு ரசிகர்கள் வந்து ஆதரவு கொடுப்பதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. நாங்கள் இங்கு விளையாடிய போது அவர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்காத நேரங்கள் இருந்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து