முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக செஸ் சாம்பியன்ஷிப் 7-வது சுற்று: முன்னிலை பெறுவாரா குகேஷ் ? - இன்று சீன வீரருடன் பலப்பரீட்சை

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      விளையாட்டு
Gugesh-Neboniyaach

Source: provided

கோலாலம்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் 7-வது சுற்று இன்று நடைபெறவுள்ள நிலையில் சீன வீரரை பின்னுக்குத்தள்ளி இந்திய வீரர் குகேஷ் முன்னிலை பெறுவாரா ?  என்ற ஆவல் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

3-வது சுற்றில் வெற்றி...

இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இப்போட்டி 14 சுற்றுகள் கொண்டதாகும். வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும். முதலில் 7.5 புள்ளிகளை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார். முதல் சுற்றில் டிங் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். 2-வது, 4-வது, 5-வது,6-வது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

இன்னும் 8 சுற்றுகள்... 

6 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இன்னும் 8 சுற்றுகள் மீதமுள்ளது. குகேஷ்-டிங் லிரென் மோதும் 7-வது சுற்று போட்டி இன்று நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடுகிறார். இதில் அவர் வெற்றி பெற்று முன்னிலை பெறுவாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் போராட்டம்...

முன்னதாக நடந்த 6-வது சுற்று ஆட்டத்தில் டிங் லீரன் வெள்ளை நிற காயுடனும், குகேஷ் கருப்பு நிற காயுடனும் விளையாடினர். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நடப்பு சாம்பியன் ஆன சீன வீரர் டிங் லீரன் கடுமையாக போராடினார். ஆனால் குகேஷ் தற்காப்பு ஆட்டத்தை பயன்படுத்தி டிங் லீரனுக்கு பதிலடி கொடுத்தார். இறுதியில் இந்த ஆட்டம் 46வது நகர்த்தலில் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து