முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ரன்களில் 4 விக்கெட: 46 ஆண்டுக்கு பிறகு மே.இ.தீவுகள் வீரர் ஜெய்டன் சீல்ஸ் புதிய சாதனை

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      விளையாட்டு
West-Indies 2024-05-09

Source: provided

கிங்ஸ்டன் : வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்களில் 4 விக்கெட எடுத்து 46 ஆண்டுக்கு பிறகு மே.இ.தீவுகள் வீரர் ஜெய்டன் சீல்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.

சுற்றுப்பயணம்...

வங்காளதேசம் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 30-ந் தேதி கிங்ஸ்டனில் தொடங்கியது. முதல் நாளில் ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்கியது. இதில் வங்காளதேசம் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 71.5 ஓவர்களில் 164 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டும், ஷமர் ஜோசப் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஜெய்டன் சீல்ஸ்... 

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆட்ட நேர முடிவில் 37 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் கடந்த 46 ஆண்டுகளில் மிக குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்த டெஸ்ட் பந்துவீச்சாளர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். அவர் முதல் இன்னிங்ஸில் 15.5 ஓவர்கள் பந்து வீசி வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவர் ஒரு ஓவருக்கு சராசரியாக 0.30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ளார்.

குறைந்த எக்னாமி.... 

1978-ம் ஆண்டு பிறகு குறைந்த எக்னாமி வைத்த பந்து வீச்சாளராக உமேஷ் யாதவ் இருந்தார். அவர் 2015-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 21 ஓவர்களில் 16 மெய்டன், 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 0.42 என்ற எக்னாமியில் பந்து வீசினார். தற்போது இந்த சாதனையை ஜெய்டன் முறியடித்துள்ளார். ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் பானு நட்கர்னி முதல் இடத்தில் உள்ளார். அவர் 1964-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்த சாதனையை படைத்துள்ளார். 32 ஓவர்கள் பந்து வீசி 27 மெய்ட்ன் மற்றும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வெறும் 5 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து