முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசம் 164 ரன்னில் அவுட்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      விளையாட்டு
Bangladesh 2024-05-11

Source: provided

வங்காளதேசம் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் தொடங்கியது. முதல் நாளில் ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்கியது. இதில் வங்காளதேசம் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 71.5 ஓவர்களில் 164 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 64 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டும், ஷமர் ஜோசப் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 37 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வெய்ட் 33 ரன்னுடனும், கார்டி 19 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

______________________________________________________________________________________

பும்ராவுக்கு இங்கி. வீரர் புகழாரம்

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 1 - 0 (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி டிசம்பர் 6-ந் தேதி அடிலெய்ட் நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் சிறந்த பவுலர் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீபன் ஃபின் வியப்பான பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது.,  ஜெய்ஸ்வால் 161 ரன்களை சிறப்பாக குவித்தார். ஆனால் தற்சமயத்தில் உலகின் சிறந்த வீரராக செயல்படும் ஜஸ்ப்ரித் பும்ராவின் செயல்பாடுகளை தான் நான் விரும்பி பார்த்தேன். தற்போது யாரும் அவரை போல் இல்லை. உண்மையில் அவரை பார்க்கும் போது நகைச்சுவையானர் போல தெரிகிறது. ஏனெனில் நீங்கள் பார்க்கும் போது அவர் அந்தளவுக்கு அசத்தலாக செயல்படுகிறார். நல்ல வேளையாக அவரது பந்து வீச்சை நான் எதிர்கொள்ளவில்லை. என்று கூறினார்.

______________________________________________________________________________________

சிராஜுக்கு பும்ரா அட்வைஸ் 

ஒரே லென்த்தில் வீசி உங்கள் பந்துவீச்சை ரசியுங்கள் என்று இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா அறிவுரை வழங்கியதாக சிராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- நான் எப்போதும் பும்ரா பாய் உடன் பேசிக்கொண்டே இருப்பேன். முதல் போட்டிக்கு முன்பே நான் என்னுடைய அனுபவத்தை கூறினேன். அப்போது அவர் என்னிடம் விக்கெட்டுக்காக ஓட வேண்டாம். ஒரே லென்த்தில் வீசி உங்கள் பந்துவீச்சை ரசியுங்கள்.

அப்போது விக்கெட் விழவில்லை என்றால் என்னிடம் வந்து கேளுங்கள். அதற்குப் பிறகு நான் நன்றாக பந்து வீசினேன் விக்கெட்டுகளையும் வீழ்த்தினேன். ஆஸ்திரேலியா எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் ஆகும். ஏனென்றால் இந்த ஆடுகளங்களில் பவுன்ஸ் மற்றும் வேகம் என ஒரு வேகப்பந்து வீச்சாளர் விரும்பும் அனைத்தையும் ரசிக்கலாம். எனவே உங்கள் பந்துவீச்சை ரசிப்பதற்கு உங்களுக்கு ஒரு வித்தியாசமான நம்பிக்கை கிடைக்கும். என்று கூறினார்.

______________________________________________________________________________________

ஜப்பான் அணிக்கு 340 ரன்கள் இலக்கு 

8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜப்பான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மத்ரே களமிறங்கினர். சூர்யவன்ஷி 23 ரன்களிலும், ஆயுஷ் மத்ரே 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து ஆண்ட்ரே சித்தார்த் தனது பங்குக்கு 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

மிடில் ஓவர்களில் ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது அமான்- கார்த்திகேயா ஜோடி சிறப்பாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். கார்த்திகேயா 57 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் அமான் நிலைத்து விளையாடி சதம் அடித்து அசத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. ஜப்பான் தரப்பில் கீபர் லேக் மற்றும் ஹ்யூகோ கெல்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 340 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஜப்பான் பேட்டிங் செய்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து