முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்: புதுச்சேரியில் குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மழை நிவாரண நிதி : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      இந்தியா
Rangasamy 2023 07-16

Source: provided

புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் கோரத்தாண்டவத்தால் புதுச்சேரியில் விடிய, விடிய கனமழை கொட்டி எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில், அங்கு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.5,000 மழை நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புதுச்சேரி-மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கியது. புதுச்சேரி நகர பகுதி மட்டுமல்லாமல் பாகூர், வில்லியனூர், அரியாங்குப்பம், மணவெளி, திருபுவனை, திருக்கனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காணும் இடங்கள் எல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு படகுகளில் சென்று, வீடுகளில் தத்தளித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்தனர். படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

சேதம் அடைந்த படகுகளுக்கு தலா ரூ.10,000, விவசாய நிலம் ஹெக்டருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்கப்படும். மழை வெள்ளத்தில் இறந்த மாட்டிற்கு ரூ.40,000, கிடாரி கன்று குட்டிக்கு ரூ.20,000-ம் வழங்கப்படும். சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா ரூ.10,000-ம் நிவாரணம் வழங்கப்படும். மழை வெள்ளத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். புதுச்சேரியில் மழைக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து