முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: பார்லி. வளாகத்தில் பா.ஜ.க., இன்டியா கூட்டணி போராட்டம்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      இந்தியா
Parliment-2024-12-19

புதுடெல்லி, அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர்ச்சையாக்குவதாகக் கூறி பா.ஜ.க.வும் நேற்று (டிச.19) காலை பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் பாராளுமன்ற வளாகத்தில் சலசலப்பு நிலவியது.

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று திரண்ட பா.ஜ.க. எம்.பி.க்கள், ‘பாபா சாஹேப் அம்பேத்கர் நமக்கு வழிகாட்டினார். ஆனால் காங்கிரஸ் தவறான பாதையில் இட்டுச்சென்றது’ என்ற பதாகைகளை ஏந்தியபடி காங்கிரஸை குற்றஞ்சாட்டினர். ஊடகங்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “காங்கிரஸ் குடும்பத்தினர் தங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்டனர். ஆனால் பாபா சாஹேப் அம்ப்தேகருக்கு அவர்கள் வழங்கவில்லை. அதன்மூலம் பாவம் செய்தனர். அந்தப் பாவத்தைப் போக்க அவர்கள் ஒரு நாள் மவுன விரதம் இருக்க வேண்டும்.அமித்ஷா பேச்சை காங்கிரஸ் திரித்துப் பேசுகிறது. அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கியது பா.ஜ.க. அரசு தான். அமித் ஷா பேச்சை அரசியலாக்கி அதன்மூலம் தனக்கு பிரபல்யத்தைத் தேடிக் கொள்ள காங்கிரஸ் முயற்சிக்கிறது” என்றார்.

போராட்டத்தின் போது பா.ஜ.க. எம்பி பிரதாப் சாரங்கி காயமடைந்துள்ளார். பாராளுமன்றத்துக்கு வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒரு எம்.பி.யை தள்ளிவிட அவர் தன் மீது விழுந்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக சாரங்கி குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் கோஷம்: காங்கிரஸ் கட்சியினர் பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்று அமித் ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இத்தகைய சலசலப்புகளுக்கு இடையே மக்களவை, மாநிலங்களவை இரண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, மாநிலங்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை விவாதம் நடைபெற்​றது. விவாதத்​தின் முடி​வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்​போது, ‘அம்​பேத்​கர்.. அம்பேத்​கர்.. அம்பேத்​கர்’ என முழக்​கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்​டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்​திருந்​தால், சொர்க்​கத்​தில் அவர்​களுக்கு இடம் கிடைத்​திருக்​கும். அம்பேத்​கரின் பெயரை காங்கிரஸ் எடுத்​துக்​கொள்​வ​தில் பா.ஜ.க. மகிழ்ச்​சி​யடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்​வுகள் குறித்​தும் காங்​கிரஸ் பேச வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்​சுக்கு எதிர்க்​கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. மேலும், அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித் ஷா அவமதித்து​விட்டதாக கூறி, பாராளு​மன்ற வளாகத்​தில் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்​கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு கட்சிகளின் உறுப்​பினர்கள் அம்பேத்கரின் புகைப்​படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து