முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சு: மாநிலங்களவையில் அமித்ஷாவுக்கு எதிராக காங். உரிமை மீறல் நோட்டீஸ்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      இந்தியா
Mallikarjuna-Karke 2023 02

புதுடெல்லி, அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக மாநிலங்களவையில் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசியல் சாசனம் மீது மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு விவாதத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அம்பேத்கர் பற்றி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இன்டியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று முன்தினம் இரு அவைகளும் முடங்கின.

இந்த நிலையில், நேற்று காலை 11 மணியளவில் இரு அவைகளும் தொடங்கின. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதனால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுகிறது என அதன் தலைவர் ஓம் பிர்லா கூறினார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் முடங்கியது. இதனால், அவையை அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து அறிவித்து உள்ளார். இந்த விவகாரம் எதிரொலியாக, 2-வது நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கின.

இந்த நிலையில் அமித்ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய தொனி நையாண்டித்தனமாக, மிக மோசமாக இருந்தது என்று கூறியுள்ள கார்கே, மாநிலங்களவை விதி 188-ன் கீழ் அமித்ஷா மீது ஏன் உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வரக்கூடாது என கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து