முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      இந்தியா
Monkey 2023-12-24

Source: provided

கேரளா: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு குரங்கம்மை தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் கண்ணூருக்கு வந்த இருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவமனைகளில் கூடுதலாக தனி வார்டுகளை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு, கேரளா சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

நிலைமையை ஆய்வு செய்வதற்காக மாநில அளவிலான விரைவு பொறுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரிடம் தொடர்பில் இருந்த நபர்கள் யாருக்காவது அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக கேரள சுகாதார துறைக்கு தெரிவிக்கும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குரங்கம்மை தொற்று பாதிப்பு சமீபத்தில் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து