முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

84 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்ய படை

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      உலகம்
Drones 2023 06 28

Source: provided

மாஸ்கோ: உக்ரைனில் இருந்து எல்லை தாண்டி வந்த 84 டிரோன்களை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய ராணுவம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு போரிட்டு வருகிறது.

இந்த நிலையில், ரஷியாவின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைன் நாட்டின் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றுமுன்தினம் இரவு ரஷியாவின் எல்லைக்குள் டிரோன்கள் மூலம் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான உக்ரைனின் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம், எல்லை தாண்டி வந்த 84 உக்ரைன் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் 36 டிரோன்கள் ராஸ்டோவ் பகுதியிலும், 21 டிரோன்கள் பிரையன்ஸ்க் பகுதியிலும், 14 டிரோன்கள் பெல்கோராட் பகுதியிலும், 6 டிரோன்கள் வோரோனெக் பகுதியிலும், தலா 3 டிரோன்கள் குர்ஸ்க் மற்றும் தம்போவ் பகுதிகளிலும், ஒரு டிரோன் கிராஸ்னோடார் பகுதியிலும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து