முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: இந்திய அணிக்கான வாய்ப்பு

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      விளையாட்டு
Bumra 2024-03-20

Source: provided

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணியின் வாய்ப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

இரு அணிகள் ?

3-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லண்டன் லார்ட்சில் நடக்கும் இதன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் இரு அணிகள் எவை? என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு போட்டி நிலவுகிறது. இந்த வாய்ப்பில் தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. ஏறக்குறைய மற்ற அனைத்து அணிகளும் வெளியேறிவிட்டன.

2 போட்டிகளில்... 

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற உள்ள வாய்ப்பு விவரம் பின்வருமாறு:- இந்திய அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. தற்போது புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் எந்த வித சிக்கலுமின்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மாறாக தோல்வியடைந்தால் இந்திய அணி வெளியேற நேரிடும்.

முன்னேற முடியும்...

அதேவேளை 1 வெற்றி 1 டிரா சந்தித்தாலும் இந்திய அணி இறுதிபோட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதற்கு ஆஸ்திரேலியா அடுத்ததாக நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் குறைந்தபட்சம் 1 டிராவை சந்திக்க வேண்டும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் இந்திய அணியால் இறுதிபோட்டிக்கு முன்னேற முடியும்.

ஆஸ்திரேலியா... 

மாறாக 1 வெற்றி 1 தோல்வியை சந்தித்தால் ஆஸ்திரேலியா இலங்கைக்கு எதிரான 2 போட்டிகளிலும் தோற்க வேண்டும். அல்லது தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ( 2 போட்டிகள்) ஒயிட்வாஷ் ஆக வேண்டும். இவ்வாறு நடந்தால் இந்திய அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து