முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்திக் குறித்து பரோடா அணி

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      விளையாட்டு
Hardik-Pandya 2023 08 02

Source: provided

கடந்த உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பரோடா அணியில் இடம்பெற்று விளையாடிய இந்திய முன்னணி ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா. விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இடம்பெறவில்லை. இது குறித்து விளக்கமளித்துள்ள பரோடா கிரிக்கெட் வாரியம், "அவர் (ஹர்திக் பாண்ட்யா) நாக் அவுட் சுற்று போட்டிகளில் விளையாடுவதாக எங்களிடம் தெரிவித்துள்ளார். அதனாலயே லீக் சுற்றில் அவர் அணியில் இடம்பெறவில்லை" என்று தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதம் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு தேவையான சில வீரர்களை இந்த போட்டியில் இருந்து தேர்வாளர்கள் அடையாளம் காண இருக்கிறார்கள். அந்த சூழலில் ஹர்திக் லீக் போட்டிகளை தவற விட்டுள்ளது அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் ஹர்திக் கடைசியாக கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் 50 ஓவர் போட்டியில் விளையாடினார். அதிலும் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். அதன்பின் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________________

இளம் வீரர் தேர்வு குறித்து ஜேசன்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இளம் வீரரை சேர்த்திருப்பது உற்சாகத்தை அளிப்பதாக முன்னாள் வீரர் கூறியுள்ளார்.  சாம் கொன்ஸ்டாஸ் தேர்வு குறித்து முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி கூறியதாவது: நான் இளம் வீரர்களை அணியில் எடுப்பதற்கு எதிரான் ஆள் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக இளம் வீரர்கள் புதியதாக சேர்க்கப்படவில்லை. சாம் கொன்ஸ்டாஸை அணியில் சேர்த்திருப்பது உற்சாகத்தை தூண்டுகிறது என்றார்.சமீபத்தில் ஜில்லஸ்பி பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

அணியில் இருந்து நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளது குறித்து ஜில்லஸ்பி, “அது நிச்சயமாக மெக்ஸ்வீனிக்கு வருத்தமாக இருக்கும். உலகின் சிறந்த பந்துவீச்சாளருக்கு எதிராக டெஸ்ட்டில் அறிமுகமானது மிகவும் கடுமையானதாக இருக்கும். அவர் மீண்டு வருவாரென நம்புகிறேன். இத்துடன் உலகம் முடிந்துவிடுவதில்லை. 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார். எங்கே சரிசெய்ய வேண்டுமென அவருக்குத் தெரியும்”என்றார். மிட்செல் மார்ஷுக்கு பதிலாக வெப்ஸ்டரை ஆஸி. சிந்திக்க வேண்டும். அலெக்ஸ் கேரி முன்னதாகவும் வெப்ஸ்டர் 7ஆவது இடத்திலும் களமிறங்க வேண்டும் எனக் கூறினார்.

_______________________________________________________________________________________

தமிழகம் - சண்டிகர் ஆட்டம் ரத்து

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர், மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் நேற்று தொடங்கியது. ஜனவரி 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் அரியானா, மும்பை, தமிழகம் உள்ளிட்ட 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.

இதில் தமிழக அணி 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. சண்டிகர், மிசோரம், சத்தீஷ்கார், ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம், விதர்பா ஆகியவை இந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இதில் தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று சண்டிகரை எதிர்கொள்வதாக இருந்தது. இந்த ஆட்டம் விஜயநகரத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்படுவதற்கு முன்னரே அங்கு மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின்னர் போட்டி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக டாஸ் கூட சுண்டப்படாமல் ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது. 

_______________________________________________________________________________________

சச்சின் பகிர்ந்த சுவாரஸ்ய வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான். இவர் 2011-ம் ஆண்டில் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தவர். ரிவர்ஸ் - ஸ்விங் பந்துவீச்சில் கில்லாடியான இவர் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். இந்நிலையில் ஜாகீர் கான் பந்துவீசும் ஆக்சன் போலவே ஒரு சிறுமி பந்துவீசி அசத்தும் வீடியோ இணையத்தில் வைரலானது. 

இதனை கண்ட சச்சின் டெண்டுல்கர் அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளார். மேலும் அந்த பதிவில் ஜாகீர் கானையும் டேக் செய்துள்ளார். சச்சின் பதிவிட்டுள்ள அந்த பதிவில், "மென்மையானது, எளிமையானது, பார்ப்பதற்கு அழகானது! சுஷிலா மீனாவின் பந்துவீச்சு ஆக்சனில் உங்கள் சாயல் தெரிகிறது, ஜாகீர் கான். நீங்களும் அதைப் பார்க்கிறீர்களா?" என்று பதிவிட்டுள்ளார்.

_______________________________________________________________________________________

கோலியின் உணவகத்திற்கு நோட்டீஸ்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமாக 'One8 Commune' என்கிற பார் மற்றும் உணவகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், விராட் கோலியின் உணவகத்திற்கு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தீ பாதுகாப்பு விதிகளை சரிவர கடைபிடிக்கவில்லை என்று கூறி தனி நபர் அளித்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, இதே உணவகம் நள்ளிரவு 1 மணிக்கு மேல் செயல்பட்டதற்காக கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________________

குகேஷ் உருவத்தை வரைந்த ஓவியர்

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி.குகேஷின் உருவத்தை வண்ண நூலால் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பெண் ஓவியர் ரேவதி சௌந்தர்ராஜன். இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி. குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம் கருண்யா பகுதியை சேர்ந்தவர் ரேவதி சௌந்தர்ராஜன். ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர் . இந்த நிலையில், டிசம்பர் 2024 இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் சாதனையை கௌரவிப்பது மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் பெண் ஓவியர் ரேவதி சௌந்தரராஜன் வண்ண நூலால் குகேஷின் உருவத்தை வரைந்து குகேஷ்-க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குகேஷ் உருவப்படத்தை 3 1/4 அடி உயரம் 3 அடி அகலத்தில் காடா துணியினை வைத்து வண்ண நூலால் வரையப்பட்டுள்ளதை பார்த்து ரசித்த அந்த பகுதி மக்கள் உள்ளிட்ட பலரும் ரேவதி சௌந்தரராஜனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

_______________________________________________________________________________________

மனைவிக்கு ரோகித் வாழ்த்து 

இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா தனது மனைவி ரித்திகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தாண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் வென்றது. அத்துடன் டி20யில் ஓய்வை அறிவித்தார். ரோஹித் சர்மா தனது நீண்டநாள் காதலி ரித்திகா சஜ்டாவை முதன்முதலாக 2008இல் சந்தித்தார். பின்னர் டிச.13, 2015இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு சமைரா (5) என்ற பெண் குழந்தை இருக்கிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஹித் சர்மா, “மீண்டும் மீண்டும் பல பிறந்தநாள் வர வாழ்த்துகள் ரித்திகா. வாழ்க்கையின் நீ என்னுடன் இருக்கும்போது நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நல்ல நாளாக அமையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ரோஹித்தின் மனைவி ரித்திகாவுக்கு இது 37ஆவது பிறந்தநாள். இவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இதனால், பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா கலந்துகொள்ளாததும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து