முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவில் மண்டல காலம் நிறைவு வரும் 30-ம் தேதி மீ்ண்டும் திறப்பு

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      இந்தியா
Sabarimala 2024-11-5

Source: provided

திருவனந்தபுரம்: மண்டல காலம் நிறைவுவையொட்டி சபரிமலை கோவிலில் மீ்ண்டும் வருகிற 30-ம் தேதி நடை திறக்கப்படுகிறது.

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் (கார்த்திகை 1-ந்தேதி) மண்டல காலம் தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

41 நாட்கள் நடந்து வந்த பூஜையின் சிகரமாக மண்டல பூஜை நேற்று நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நேற்று நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ஆகியோர் தலைமையில் மண்டல பூஜை நடைபெற்றது. அய்யப்பன் தங்க அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முன்னதாக மண்டல பூஜையையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து கடந்த 22-ம் தேதி 450 பவுன் தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் நேற்று முன்தினம் மதியம் பம்பைக்கு வந்தடைந்தது. அங்கு கணபதி கோவிலில் சிறப்பு வழிபாடுக்கு பிறகு மாலை 3 மணிக்கு சபரிமலை நோக்கி புறப்பட்டது. நீலிமலை, அப்பச்சிமேடு, மரக்கூட்டம், சரம்குத்தி வழியாக தங்க அங்கி தலைச்சுமையாக சன்னிதானம் கொடி மரம் அருகே கொண்டு வரப்பட்டது. அங்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிறகு மாலை 6.15 மணிக்கு தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தங்க அங்கி கொண்டு வரப்பட்டதால் நேற்று முன்தினம் பிற்பகலுக்கு பிறகு பக்தர்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்படவில்லை. இன்றைய மண்டல பூஜைக்கு பிறகு பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

மீண்டும் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைக்கு பிறகு இரவு 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என்றும், மகர விளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் மண்டல பூஜை நிறைவுபெறுகிறது. பிறகு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக 3 நாட்களுக்கு பிறகு வருகிற 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து