முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'பாக்ஸிங் டே' டெஸ்ட் போட்டி: ஆஸி. அணி நிதான தொடக்கம்: முதல்நாளில் 311 ரன்கள் குவிப்பு

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      விளையாட்டு
26 Ram 50

Source: provided

ஆஸ்திரேலியா: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஜடேஜா, ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சுற்றுப்பயணம்... 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

ஆஸி. பேட்டிங்...

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அறிமுக வீரர்...

இப்போட்டியின் மூலம் அறிமுகமான 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் பும்ராவின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவிற்கு எதிராக குறிப்பாக 4,483 பந்துகளுக்கு பிறகு சிக்சர் அடித்த வீரராக மாறி சாதனை படைத்தார். நிதானமாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 57 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 72 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், பும்ரா பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். மிட்சல் மார்ஸ் 4 ரன்களிலும் அலெக்ஸ் கேரி 31 ரன்களையும் ஆட்டமிழந்தனர்.

ஸ்மித் - கம்மின்ஸ்...

இறுதியாக முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்துள்ளது. நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஜடேஜா, ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து