முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு முறை பயணமாக ஈராக் பிரதமர் ஈரான் சென்றார்

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      உலகம்
Iran 2024-03-17

Source: provided

டெஹ்ரான் : ஈராக் பிரதமர் முகமது ஷியா அல் சூடானி அரசு முறை பயணமாக ஈரான் சென்றுள்ளார்.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஈராக்கில் அமெரிக்க படைகள் பல ஆண்டுகளாக முகாமிட்டுள்ளன. தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு ஈராக் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறபோதும், அமெரிக்கா தனது படைகளை அங்கு நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் அரசு முறை பயணமாக கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஈரானுக்கு சென்ற ஈராக் நாட்டின் பிரதமர் முகமது ஷியா அல் சூடானி, தலைநகர் டெஹ்ரானில் ஈரானின் மூத்த மத தலைவர் அயதுல்லா அலி கமேனியை சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், மத்திய கிழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள், குறிப்பாக சிரியாவின் சூழ்நிலைகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர். அப்போது பேசிய அயதுல்லா அலி கமேனி ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு முற்றிலும் சட்டவிரோதமானது.

இதற்கு எதிராக அரபு நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். ஈராக்கில் தங்கள் இருப்பை ஒருங்கிணைக்கவும், விரிவுபடுத்தவும் அமெரிக்கர்கள் முயற்சிகளை மேற்கொள்வதற்கான சான்றுகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டும் என தெரிவித்தார். அதன் பின்னர் பேசிய ஈராக் பிரதமர் சூடானி காசா மற்றும் லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை கடுமையாக கண்டித்தார். மேலும் காசா மற்றும் லெபனான் மக்களுக்கு ஆதரவளிக்கும் தனது நாட்டின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை அவர் சுட்டிக் காட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து