முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      தமிழகம்
Bus 2024-10-21

Source: provided

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும்  நேற்று முதல் 21,904 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடங்கின.

பொங்கலையொட்டி நேற்று (ஜன. 10) முதல் 13-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினமும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாள்களும் சேர்த்து 14,104 பேருந்துகள், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாள்களுக்கு 7,800 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக ஜன. 15 முதல் 19-ஆம் தேதி வரை, தினமும் இயக்கக்கூடிய 10,460 பேருந்துகளுடன் கூடுதலாக 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 என மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதன்படி, பொங்கலுக்கு மொத்தம் 44,580 பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு கிளாம்பாக்கம் மஃப்சல் புறநகர் பேருந்து முனையம்: புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள். கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து முனையம்: வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.  கோயம்பேடு பேருந்து நிலையம்: கிழக்கு கடற்கரை (இசிஆர்), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.  மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.

முன்பதிவு மையங்கள்: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும், டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் www.tnstc.in எனும் இணையதளம் மூலமாகவும் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்து சேவை தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 94450 14436 என்ற கைப்பேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்த புகார்களை 1800 425 6151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், நகரின் பல்வேறு பகுதியிலிருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை கூடுதலாக 320 இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து