முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு காங். எதிர்ப்பு - தி.மு.க., அதிர்ச்சி

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      தமிழகம்
CM-stalin 2024-12-02

Source: provided

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதாவுக்கு காங்கிரஸ் 

எதிர்ப்பு தெரிவித்திருப்பது தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜன.,5ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை அமைச்சர் பெரியசாமி நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு அ.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவிற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் மற்றும் காங்கிரசின் விருப்பமாக உள்ளது. தனி அதிகாரி நியமன மசோதாவுக்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சியான காங்கிரஸ் கட்சியே எதிர்ப்பு தெரிவித்திருப்பது தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து